புதுக்கோட்டை எம்.பி.எம்.எம்.அப்துல்லா குறித்து இணையவாசி நெகிழ்ச்சி பதிவு!

புதுக்கோட்டை எம்.பி.எம்.எம்.அப்துல்லா குறித்து இணையவாசி நெகிழ்ச்சி பதிவு!
Published on
Updated on
2 min read

3 வயது சிறுவனுக்கு Life Support treatment க்காக உதவிய புதுக்கோட்டை எம்.பி. எம்.எம்.அப்துல்லாவை பாராட்டி முகநூல் பக்கத்தில் இணையவாசி பதிவிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவு.

புதுக்கோட்டை திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லாவின் துரிதமான நடவடிக்கையை பாராட்டி பால முரளி கிருஷ்ணன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள செய்தியில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்மாமாவின் நண்பரின் தம்பி ஒருவரின் 3 வயது மகனுக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஃபின்லாந்து நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது குழந்தைக்கு இதற்கு மேல் சிகிச்சை அளிப்பதில் பயனில்லை, அதனால் நாங்கள் சிகிச்சையை நிறுத்தப்போகிறோம் என்று சொல்லிவிட்டதால், இந்திய மருத்துவர்களை தொடர்பு கொண்ட குழந்தையின் தந்தை, ஏர் ஆம்புலன்ஸ் மூலம்  உடனடியாக இந்தியா வருவதற்கு யாரையாவது தொடர்பு கொள்ள முடியுமா என்று என்னை அழைத்து பேசியிருந்தனர். 

அப்போது சட்டென நினைவுக்கு வந்தவர் புதுக்கோட்டை MP அண்ணன் M.m. Abdulla  அவர்கள்தான். அவரை தொடர்பு கொண்டால் நிச்சயம் நடக்கும் என நம்பி அவருக்கு அன்று இரவு 10 மணி அளவில் அழைப்பு விடுத்தேன் .அன்றுதான் சரியாக அவர்களின் பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியிருந்ததாக Facebook-ல் அவர் போஸ்ட் செய்திருந்தார். போனை எடுப்பாரோ மாட்டாரோ என்கிற ஒரு தயக்கத்திலேயே போன் செய்திருந்தேன். ஒரு முக்கால் மணி நேரம் கழித்து அவரே திருப்பி என்னை அழைத்தார். 

என்னவென்று கேட்க, அண்ணா இப்படி ஒரு பிரச்சனை !  ஒரு மூணு வயசு பையயனின் Life Support treatment - ஐ நிறுத்தப் போவதாக சொல்கிறார்கள். அந்த பையனை உடனடியாக இங்கு கொண்டு வர Embassy மூலம் உதவி செய்து தர வேண்டும் எனக் கேட்டேன். "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க... உடனடியாக அந்த பையனோட டீடெயில்ஸ் மட்டும் எனக்கு அனுப்பி விடுங்க... அந்த பையனோட அப்பா நம்பரையும் எனக்கு அனுப்பி விடுங்க நான் பார்த்துக்கிறேன்" அவ்வளவுதான் சொன்னார் . 

பின் அவருடைய நேர்முக உதவியாளர் அண்ணன் பிரபு அவர்கள் ஃபின்லாண்டில் இருக்கும் அவரின் தந்தையை தொடர்பு கொண்டு பேசி எம்பஸி மூலமாக கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அங்கு ஹாஸ்பிடல் & ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தால் கொஞ்சம் நெருக்கடிகள் ஏற்பட்டதால் சில நாட்கள் தாமதமானாலும் அவர்கள் இன்று நல்லபடியாக சென்னை வந்து சேர்ந்து விட்டனர். அந்த பையனை ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதியும் செய்து விட்டனர். 

உதவி செய்தது மட்டுமில்லாமல் தொடர்பிலேயே இருந்து Embassy-ல் இருந்து வந்த Mail - ஐ எனக்கும், குழந்தையின் தந்தைக்கும் Screenshot ஆக அனுப்பி இருந்தார். அவர்கள் வந்தடைந்த தகவலை சொல்லி நன்றி கூற மீண்டும் இன்றிரவு அழைத்திருந்தேன். பல முறை நான் கூறிய நன்றிக்கு  "It's my duty" என்று எளிதாக முடித்துக் கொண்டார். எனினும் உதவிக்கும் உங்க அன்புக்கும் நன்றி அண்ணா ! 
மென்மேலும் உங்கள் பணி சிறக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். !!! 

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்த நெகிழ்ச்சி பதிவை இணையவாசிகள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com