வரும் ஆண்டுகளில் 100% தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்...முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!

வரும் ஆண்டுகளில் 100% தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்...முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
Published on
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மொத்தமாக 89 புள்ளி 12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89 புள்ளி 12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 புள்ளி 8 சதவீதம் குறைந்துள்ளது.

அரசு பள்ளிகளை பொருத்தவரை 78 புள்ளி 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் கணிதப்பாடத்தில் 61 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 49 மாணவர்களூம், சமூக அறிவியலில் 19 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  முதலமைச்சர் ரங்கசாமி, வரும் ஆண்டுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்பட கூறினார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com