அரை மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டம்...

சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரை மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டம்...

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும்,  சாலைகள் சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறி பொதுமக்கள் தஞ்சாவூர் - பூதலூர் வழித்தடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | காவல் துறையைக் கண்டித்து சாலை மறியல்...

இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒரு பகுதி சாலையை உயரமாக அமைத்தும், மறுபகுதி சாலை அமைக்காதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்தும், சாலைகளில் செல்வதாகவும்,மேலும் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதும், இதனால் வேலைக்கு செல்வார்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | குழியை மூட குழியிலேயே இறங்கி நூதன போராட்டம் செய்த வீட்டுப் பெண்கள்...

எனவே உடனடியாக இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைத்து சாலைகளை முறையாக போட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்தை அடுத்து அங்கு வந்த கள்ளப் பெரம்பூர் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

மேலும் படிக்க | நாணயங்களை விழுங்கிய முதியவர்...! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம்...!