“விவசாயிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் அறிவிப்பு

“விவசாயிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” -  அமைச்சர்  அறிவிப்பு
Published on
Updated on
1 min read

கூட்டுறவு வங்கியில் அதிக  அளவில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க அரசு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில்   உழவன் நலன் மற்றும் வேளாண்மை துறை சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணையை வேளாண்மைத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழங்கினார். 

அதனைத்  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் :-

தமிழ்நாடு தேர்வாணைய பணியாளர் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற 213 பேர், தட்டச்சர் 183 பேர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணிக்கு 30  பேருக்கு இன்று பணி ஆணை வழங்கப்பட்டதாக கூறினார். 

கடந்த காலங்களில் வட கிழக்கு பருவமழையின் போது இது போன்ற பிரச்சினை நிலவிய பிரச்சனைகள் இந்த ஆண்டு எந்த பாதிப்பும் இருக்காது எனவும், அதிகளவு நெல் தேக்கி வைத்திருப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் குடோன்கள் மற்றும் ஆலைகளுக்கு வழங்கி அதனை அரிசியாக வைத்துக் கொள்ள  நடவடிக்கை எடுக்கப்பட்ட இருப்பதாகவும் அதனால் தான் ரேஷன் அரிசியில் நல்ல தரமான அரிசி வழங்கப்படுவதாக தெரிவித்தார். 

மழையினால் பயிர் பாதிக்கப்பட்டால் அதற்கான பயிர் காப்பீடு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்து இருக்கிறது இதன் மூலம் அனைவருக்கும் இழப்பீடு தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது எனவும்,  தற்போது வரை சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கு 4 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருப்பதாக கூறினார்.

மேலும், கூட்டுறவு வங்கியில் அதிக அளவு விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்   அரசு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் விவசாயிகளுக்கு உரம் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் அதிகளவு உரங்கள் கையிருப்பு இருப்பதாகவும்  விவசாயிகள் யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com