ஜப்பான் நாட்டின் கீட்டோ நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் செல்ல உள்ளார்.
இது தொடபாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை முதலமைச்சர் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலும் பிறகு ஆறு நாட்கள் ஜப்பானிலும் முதலமைச்சர் இருப்பார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் தான் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக புரிந்தனர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முறை கீட்டோ நகரிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான இந்த நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்
அதேபோல டோக்கியா நகரில் 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார். இதில் கயோசூடோ & ஜெட்ரோ ஆகிய ஜப்பான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், ஜப்பான் நாட்டின் தொழில்துறை அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து ஜப்பானின் வர்த்தக நிறுவனமான ஜெட்ரோ நிறுவனத்தின் தலைவருடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.