" சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார்" - கே. எஸ். அழகிரி குற்றசாட்டு.

" சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார்" -  கே. எஸ். அழகிரி குற்றசாட்டு.
Published on
Updated on
1 min read

காவேரி விவகாரத்தில் தமிழர் விரோதியாக  பா‌.ஜ.க. செயல்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,  சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர்  கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசும்போது, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரமாக விளங்கியவர் எச்.வசந்தகுமார். அவர் அற்புதமான தலைவர். பெருந்தன்மை, மனிதாபிமானம் மிக்கவர் என புகந்துரைத்தார்.

தொடர்ந்து பேசுகையில்" சந்திரயான்-3 தன் இலக்கை அடைந்து இருக்கிறது. அனைத்து இந்தியர்களுக்கும் மகிழ்ச்சி நாள்.இதற்கு அடித்தளமிட்டு, விண்வெளி ஆராய்ச்சி மையத்தை ஜவகர்லால் நேரு நிறுவினார். அதன் வளர்ச்சியாக, இன்று நாம் விண்வெளியை தொட்டு இருக்கிறோம். இலவச மதிய உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார். இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது", என்று கூறினார்.

பிரதமர் மோடி தன்னை நேர்மையானவர் என்று சொல்லுகிறார். சி.ஏ.ஜி எனப்படும் மத்திய தணிக்கை குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில், மத்திய அரசு துறைகளில் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. பிரதமர் மோடி இதற்கு  பதில் சொல்ல மறுக்கிறார். பரனூர் சுங்க சாவடியில் மட்டும் 6.5 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. 2-ஜி வழக்கு அனுமானத்தில் போடப்பட்டது. ஆனால், இந்த முறைகேடு குறித்து சி.ஏ.ஜி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  இருக்கிறது", என்று குற்றம் சாட்டினார்.

மேலும், வருகிற 31-ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் வாக்குசாவடி உறுப்பினர்கள் பயிற்சி பாசறை நடத்த இருக்கிறோம். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, 9 இடங்களில் வாக்குசாவடி உறுப்பினர்கள் பயிற்சி பாசறை நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்ததற்கு கர்நாடக பா‌.ஜ.க. தலைவர்கள் எடியூரப்பா, பொம்மை எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை கண்டுக்கொள்ளாமல் தமிழக பாஜக தமிழர் விரோதியாக செயல்படுகிறது என்று சாடினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com