தீபாவளியை கொண்டாடுவதற்காக கார்கில் வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
ஆண்டுதோறும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள நரேந்திர மோடி, இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடுவதற்காக கார்கில் வந்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளியை ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்ஷேராவில் கொண்டாடினார் மோடி. அப்போது பேசிய அவர் ராணுவ வீரர்களை இந்தியாவின் கவசம் எனப் பாராட்டினார். மேலும் ராணுவத்தினரால் மட்டுமே மக்கள் இரவு நிம்மதியாக தூங்க முடிகிறது எனவும் கூறியிருந்தார்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மாரிலுள்ள லோங்கேவாலாவில் 2020ம் ஆண்டு தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி. இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் வரை மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒளிரும் தீபாவளியை கொண்டாடுவர் என்று பேசியிருந்தார்.
ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியான ரஜோரி மாவட்டத்தில் 2019ல் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் மோடி. அப்போது ராணுவ வீரர்களை தனது குடும்பம் என அழைத்தார் பிரதமர்.
இதைப்போன்று 2014 முதல் இன்று வரை தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழ்க்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
இது மட்டுமல்லாமல் குஜராத் முதலமைச்சராக இருந்தது முதல் தீபாவளியன்று ராணுவ வீரர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எல்லைகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் தீபாவளி!!