திமுகவின் இரட்டை நிலைப்பாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்...!

திமுகவின் இரட்டை நிலைப்பாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்...!
Published on
Updated on
1 min read

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக இரட்டை வேடம் போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்காததையும், கரும்பு கொள்முதல் செய்யாததையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஒரு செயல்பாட்டையும் ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒரு செயல்பாட்டையும் முன்வைக்கும் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். மேலும்  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com