சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!

Published on
Updated on
1 min read

சத்தீஸ்கா் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளை பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்.

பிரதமர் மோடி சமீப மாதங்களாகத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தனது அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இன்று செல்லவுள்ளார். அங்கு அவா், நாகர்னரில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள என்எம்டிசி ஸ்டீல் லிமிடெட் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். 

தொடா்ந்து ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறாா். பிறகு தெலங்கானா செல்லும் பிரதமா் மோடி அங்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

பின்னா் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் அலகு மற்றும் பல்வேறு ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி, பிரதான் மந்திரி - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் கட்டப்படவுள்ள 20 முக்கியமான பராமரிப்பு மையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com