”இந்திய நாடு” வைக்க வேண்டியதானே...”பாரத நாடு” என்ற தலைப்பால் பொன்முடி ஆதங்கம்...!

”இந்திய நாடு” வைக்க வேண்டியதானே...”பாரத நாடு” என்ற தலைப்பால் பொன்முடி ஆதங்கம்...!
Published on: 
Updated on: 
1 min read

திருக்கோவிலூரில் நடைபெற்ற கபிலர் நிறைவு விழாவில் பாரத நாடு என்ற பட்டிமன்ற தலைப்பை கேட்டு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஆதங்கப்பட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம்  திருக்கோவிலூர் கபிலர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 46 ஆவது கபிலர் பண்பாட்டு விழாவின் நிறைவு நாளில், அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பட்டிமன்றத்திற்கு பாரத நாட்டின் பண்பாடு என தலைப்பு இருந்ததால் ஆதங்கமடைந்த அமைச்சர் பொன்முடி, பாரத நாட்டின் பண்பாடு என்ற தலைப்பை இந்திய நாடு என்று வைத்திருக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பெயரளவுக்கு பண்பாட்டுக் கழகம் நடத்தாமல், திருக்கோவிலூரின் வரலாற்றை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்த பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற பட்டிமன்றங்களை நடத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com