ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த அண்ணாமலை...!

ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த அண்ணாமலை...!
Published on
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிடுக்க, பாஜக தலைவர் அண்ணாமலை
ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளுநர் நேரடியாக இதில் தலையிட்டு மதுபானம் தொடர்பான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க, முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில்  வலியுறுத்தியுள்ளதாக ஆளுநரை சந்தித்த பிறகு அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார். கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com