“மக்கள் அச்சப்பட தேவையில்லை....” அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

“மக்கள் அச்சப்பட தேவையில்லை....” அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள்  நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்:

தமிழ்நாட்டில்  எச்3 என்2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது.  இதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், மக்களின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்களுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சென்னையில், மொத்தம் 200 இடங்களில் முகாம்கள் நடைபெறும் நிலையில் சைதாப்பெட்டையில் மருத்துவ முகாமை  சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  

அச்சப்பட தேவையில்லை:

இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரவலின் போது பின்பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை போல் தற்போதும், பாதிப்பு உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் கூறினார். அர்டிபிசிஆர் பரிசோதனையும் காய்ச்சல் முகாம்களில் இருப்பதாகவும், யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இரும்புச்சத்து மாத்திரை:

உதகையில் பள்ளி மாணவர்களுக்கு  இரும்புச்சத்து மாத்திரை தவறாக கொடுத்த விவகாரத்தில் இரண்டு சுகாதார  பணியாளர்   பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டு ஆசியர்கள்  மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com