மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அமைதி பேரணி...!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அமைதி பேரணி...!
Published on
Updated on
1 min read

ஆலந்தூர் அடுத்த மீனம்பாக்கத்தில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி பொதுமக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். 


மணிப்பூரில்  பாதுகாப்பு படை வீரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே நிலவி வரும் கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவும்,  நல்லிணக்கம் ஏற்படவும் சென்னை மீனம்பாக்கதில் அமைதி பேரணி நடைபெற்றது. 

இந்த பேரணியில், 300-க்கும் மேற்பட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள், பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கவும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com