கர்நாடகா பாஜகவுக்கு எதிராக வலுவடையும் 'PayCM' பிரச்சாரம்!!!

கர்நாடகா பாஜகவுக்கு எதிராக வலுவடையும் 'PayCM' பிரச்சாரம்!!!

Published on

கர்நாடகாவின் முதலமைச்சருக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய காங்கிரஸால் சமீபத்தில் தொடங்கப்பட்ட “ 40 சதவீத கமிஷன் அரசு” என்ற பிரச்சாரம் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் PayCM சுவரொட்டிகள் மூலம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிரான அனைத்து ஊழல் குற்றசாட்டுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒப்பந்தகாரர்கள்:

ஒரு சுவரொட்டியில் ‘ஜூனியர் இன்ஜினியர்’ பதவிக்கு ரூ. 30 லட்சம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ‘ஒப்பந்தக்காரர்கள் 40 சதவீதம்’ என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் பதவி:

முதலமைச்சர் பதவிக்காக ரூ. 2500 கோடி பண பரிவர்த்தனையில் ‘பணம் செலுத்த முடியவில்லை’ என எழுதப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக...:

ஆளும் பாஜகவுக்கு எதிராக ஊழல்களில் ஈடுபட்டதாக முதலமைச்சரையும் அமைச்சர்களையும் குறிவைத்து தாக்கி வருகிறது கர்நாடகா காங்கிரஸ்.  

பசவராஜ் பொம்மை விளக்கம்:

மாநிலத்தின் நற்பெயருக்கு மட்டுமின்றி எனது நற்பெயரையும் கெடுக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்படும் பிரச்சாரம் இது.  உடனடியாக வழக்கு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com