அழகு சாதன பொருட்களில் தங்கம் கடத்திய பயணிகள்...! பறிமுதல் செய்த அதிகாரிகள்...!

அழகு சாதன பொருட்களில் தங்கம் கடத்திய பயணிகள்...! பறிமுதல் செய்த அதிகாரிகள்...!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் ஒருசிலர் நூதன முறையில்  தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் படி பயணிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது நிசார் என்ற பயணி தனது உடைமைகளில் அழகு சாதன பொருட்கள், சென்ட் பாட்டில்  ஆகியவற்றில் அடைத்து  ரூபாய் 13.36 லட்சம் மதிப்பிலான தகடு மற்றும் உருளை வடிவில் கடத்தப்பட இருந்த 259 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : பள்ளிக்கல்வித்துறை சார்பில் துபாய் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்..! அழைத்து செல்லும் அமைச்சர்..!