"வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஓட்டு பிரச்சினை கிடையாது, சமூக நீதிப் பிரச்சனை"..! - அன்புமணி ராமதாஸ்.

தமிழகத்தின் புள்ளி விவரங்களை ஆறு மணி நேரத்தில் என்னால் கொடுக்க முடியும்....
"வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஓட்டு பிரச்சினை கிடையாது, சமூக நீதிப் பிரச்சனை"..! - அன்புமணி ராமதாஸ்.
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2.0 கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான், எங்களுக்கு எல்லா திறமைகளும் உள்ளது எனவும்,

ஆனால் இப்பொழுது ஆளக்கூடிய கட்சிகள் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை தான்  நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர் என்றும் விமர்சித்தார். மேலும்,  இந்த ஆண்டு மது விற்பனை மட்டும் 36,000 கோடி என்றும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து,  தமிழகத்தின் புள்ளிவிவரங்களை கொடுப்பதற்கு இடத்தில் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் இந்தப் புள்ளி விவரங்களை ஆறு மணி நேரத்தில் கொடுத்திருப்பேன் என்றும்,  என்னிடத்தில் எல்லா தகவல்களும் உள்ளது பிரிண்ட் அவுட் எடுப்பதற்கு தான் இந்த ஆறு மணி நேரம் என்றும் விமர்சித்தார். 

மேலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஓட்டு பிரச்சினை கிடையாது, சமூக நீதிப் பிரச்சனை எனவும்,  இதை செய்வதற்கு ஆளும் கட்சிகள் தயக்கம் காட்டுவதாகவும்,  எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை உண்டு என்றும்  கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com