அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது உள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு தேசிய மற்றும் மாநில கட்சிகள் புதிய வீயூகங்களையும் தேர்தல் கூட்டணிகளையும் அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்க இருக்கிறது. தேர்தல் பணிகளுக்காக அக்டோபர் மாதம் இறுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து தேர்தல் ஆணையர் குழு தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியதாக உள்ளது.
மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை ஒட்டி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி-கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாய்ப்பில்லை என்றும், மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் எம்.எல்.ஏ, எம்பிக்கள் கொண்ட குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில்தான் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தபடுவது என்பது நடைமுறை என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் தனது பணிகளை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!