குஜராத்திற்காக வேதனையடையும் பிரதமர் மோடி!!!

குஜராத்திற்காக வேதனையடையும் பிரதமர் மோடி!!!
Published on
Updated on
1 min read

மோர்பி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை கவனித்துக்கொள்ள மத்திய அரசு சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அதிகாரிகள் மாநில அளவிலான அதிகாரிகள் வரை உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமரின் கவலையும் ஆறுதலும்:

மோர்பி விபத்து பிரதமர் நரேந்திர மோடியை பெரிதும் உலுக்கியது.  கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு அவரது அரசியல் வாழ்க்கையில் இது இரண்டாவது முறையாக அவருடைய சொந்த மாநிலத்தில் நடந்ததால் மிகவும் வேதனையடைந்துள்ளார்.  

திங்கள்கிழமை காலை நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின நிகழ்ச்சியில் பேசும்போது அவரால் பேச முடியாத அளவிற்கு சோகத்தால் நிறைந்திருந்தார் மோடி.  இன்று காலை, அவரே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 

குஜராத்திற்காக வருந்தும் மோடி:

இதற்கு முன்னதாக மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் முடிந்ததும், குஜராத் கலவரத்தை நினைத்து அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது. பிரதமர் மோடி அவருடைய மாநிலத்தில் நடக்கும் எந்தவொரு சம்பவத்தையும் எவ்வளவு உணர்ச்சியுடையவர்  என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.  

பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மனதில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து பாஜக தலைவர்களும் அவர்களது அரசியல் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தனர். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com