சட்டத்திற்கு  புறம்பாக... தொடர் போராட்டங்கள் நடத்துவோம்..!!!

சட்டத்திற்கு  புறம்பாக... தொடர் போராட்டங்கள் நடத்துவோம்..!!!
Published on
Updated on
1 min read

உடுமலையில் கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகள்  கொண்டு வந்த வாகனங்கள் சிறை பிடித்து விவசாயிகள் போராட்டம் !!

உரக் கிடங்கு:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரகிடங்கு உள்ளது.  இந்த உரக்கடங்கில் நகராட்சி பகுதியில்  சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றது.  

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சட்டத்திற்கு புறம்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இன்றி அதிக அளவு இறைச்சி கழிவுகள் கேரளா ஓசூர் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து   கொண்டு வந்து உரக்கிடங்கில் இரவு நேரத்தில் இயந்திரம் மூலம் அரைத்து வருகின்றனர். 

சட்டத்திற்கு எதிராக:

இதனால் அருகில் வசிக்கும் கணபதி பாளையம் வெனசப்பட்டி உள்ளிட்ட  கிராம மக்களும் அருகில் வசிக்கும் தோட்டத்து சாலைப் பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.  மேலும்  துர்நாற்றம்  மூச்சு திணறல் ,நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு உள்ளிட்ட  இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த நிலையில்  கேரளாவில்  இருந்து இறைச்சி கழிவுகள்  கொண்டு வந்த இரண்டு வாகனங்களை சிறை பிடித்து விவசாயிகள் உடுமலை காவல்நிலையத்தில ஒப்படைத்துள்ளனர்.

விவசாயிகள்:

சட்டத்திற்கு  புறம்பாக இறைச்சிக் கழிவுகள் தொடர்ந்து கொண்டு வந்து அரைத்து பவுடர் செய்து  ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  இதனால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இறைச்சிக் கழிவுகள் அரைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் இல்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com