அரிய வகை கண் நோய்...சிறுவனுக்கு சிகிச்சையளிக்க உத்தரவு!

அரிய வகை கண் நோய்...சிறுவனுக்கு சிகிச்சையளிக்க உத்தரவு!
Published on
Updated on
1 min read

அரிய வகை கண் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய சிகிச்சையளிக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். 

சேலம் மாவட்டம் கொங்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த தனீஷ் என்ற சிறுவன் மரபணு சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தார். இப்பிரச்சினையால் நாளடைவில் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த செய்தியை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறுவனை சென்னைக்கு அழைத்து வர சொல்லி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், சிறுவனின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.

பின்னர் மருத்துவக்குழுவுடன் பேசிய அமைச்சர், "சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனையைத் தொடங்க உத்தரவிட்டார். மேலும்  எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து வந்து சிறுவனைப் பரிசோதனை செய்து, தேவையான உயர் சிகிச்சைகளை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com