விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகளை அலங்கரிக்க உத்தரவு!

விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகளை அலங்கரிக்க உத்தரவு!

Published on

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மாநிலத்தில் உள்ள அனைத்து விடுதலை போராட்ட வீரர்களின்  சிலைகளையும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலுள்ள விடுதலை போராட்ட தலைவர்களின் சிலைகளை தூய்மைப்படுத்தி, மலர் மாலை அணிவித்து, அரங்கங்கள்,  நினைவு மண்டபங்கள் மற்றும் மணி மண்டபங்கள் என அனைத்தும் வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com