திருச்சியில் உள்ள காவிரி மருத்துவமனையில் ஆர்பிட்டல் அதெரெக்டாமி என்கிற சிகிச்சை முறை அறிமுகபடுத்தபட்டுள்ளது.
திருச்சி காவேரி மருத்துவமனை, ஆர்பிட்டல் அதெரெக்டாமி என்கிற நவீன முறை கையாளப்படுகிறது - இந்த இருதய அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சிகிச்சை முறையில், ரத்தநாளத்தில் உள்ள கால்சியம் படிமங்களை அகற்றுவதற்கு - 1.25மி.மீ அளவுள்ள வைரத்தால் செய்யப்பட்ட கிரவுனை பயன்படுத்தி, படிமங்களை உடைத்து அதனை ரத்தத்தின் மூலம் வெளியேற்றப்படும்.
இந்த புதிய இருதய அறுவை சிகிச்சை முறைக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், கரோனரி ஆர்பிட்டல் அதெரெக்டாமி முறையில், சிறுநீரக பாதிப்புள்ள 69 வயதான நோயாளிக்கு கடுமையான கால்சியம் படிம கரோனரி தமனி நோயும் கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆர்பிட்டல் அதெரெக்டமி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு குணம் அடைந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த புதிய அறுவை சிகிச்சை மூலம் இருதயம் சார்ந்த எந்த வகையான அறுவை சிகிச்சையாக இருந்தாலும் அது பாதுகாப்பாக மேற்கொள்ளப்படும் என்று பொது மேலாளர் மாதவன் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிக்க || முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதான வழக்கு ரத்து!!