
தொடா் மழை பெய்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சில மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கனமழை வெளுத்து வாங்குவதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது உயிரிழப்பும் நடந்து வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.