இந்தியாவில் பாஜகவானது 28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் கூட்டணி கட்சிகளோடும் பெரும்பான்மையோடும் ஆட்சி செய்து வருகிறது. 2024ல் பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி இப்போதிலிருந்தே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தங்களை தயார் செய்து வருகின்றன.
பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சிகளில் உள்பூசல் ஏற்படுத்தியும் அமலாக்கத்துறை சிபிஐ ரெய்டுகள் மூலமும் ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அட்சியைக் கைப்பற்றி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிரா.
பாஜக அமலாக்க துறையையும் சிபிஐ-யும் அதன் கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அவர்களை அச்சுறுத்தும் வகையாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ரெய்டுகளையும் கையிலெடுத்தது பாஜக. ஆனால் அக்கட்சிகள் பாஜகவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படுவதாக தெரியவில்லை.
மேலும் தெரிந்துகொள்க: ஊழலால் திணறுகிறதா மம்தாவின் திரிணாமுல்!!!
ரெய்டுகளுக்கு பயப்படாத கட்சிகளின் எம். எல். ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்கியது பாஜக. அதற்கான ஆதாரங்களை திரட்டி பாஜகவிற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக அறிவித்தது ஆம் ஆத்மி.
இந்தியாவின் கண்காளிப்பு துறையும் அமலாக்க இயக்குநரகமும் தற்போது பஞ்சாபில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வன ஊழலை கண்டறிந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் கண்காணிப்பு துறையால் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வனத்துறையில் பணி நியமனம், கிணறுகள் அமைப்பது முதல் சுரங்கம் தோண்டுவது வரைபல கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் நடந்ததாக கண்காணிப்பு துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தன்மீதான குற்றங்களை மறுத்து வந்தார். இதன்பிறகு, செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையால் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கல் கண்காணிப்பு துறையிடம் கோரப்பட்டது.
மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகு, வனத்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததை முதலில் அம்பலப்படுத்தியது கண்காணிப்பு துறையே. இந்த வழக்கில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பெரும் தொகையை எப்படி பெறப்பட்டது என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர்கள், சாது சிங் தரம்சோட் மற்றும் சங்கத் சிங், அவரது மருமகன் தல்ஜித் சிங், பஞ்சாபின் தலைமைப் பாதுகாப்பாளர் பிரவீன் குமார், டிஎஃப்ஓ குர்மன்பிரீத் சிங், விஷால் சவுகான் உள்ளிட்ட பலரின் பங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.