கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டத்தில் பஜ்ரங்கள் அமைப்பினார்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் என எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தந்த தொகுதிகளுக்காக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களின் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இவ்வாறிருக்க முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தங்களது தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முக்கிய தலைவர்களின் விலகல், புது உறுப்பினர்களுக்கு வாய்ப்பு, காட்சிகளுக்கு இடையேயான அதிருப்தி, மற்றும் முக்கிய தலைவர்களின் வீட்டில் வருமான வரி சோதனைகள் என ஒட்டுமொத்த தேர்தல் களமே சூடுபிடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், நூதன முறையில் வாய்க்கு சேகரிக்க வரும் காங்கிரஸ் கட்சி காரர்களுக்கெனவே பிரத்யேகமாக தனது வீட்டின் முன் எச்சரிக்கை பதாகையை நிறுவியுள்ள நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, " இது பஜ்ரங் தளத்தின் வீடு, காங்கிரஸ் ஓட்டு பிச்சை கேட்டு வந்தால் நாய் அவிழ்த்து விடப்படும் ", என குறிப்பிட்டு அந்த பதாகை வீட்டின் முன் தொங்கவிடப்பட்டிருக்கிறது.
இப்படி, பல நூதன எதிர்ப்புகள் காங்கிரஸ் அணியினர் பாஜக கட்சி தொண்டர்கள் மீதும் பாஜக அணியினர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மீதும் தேர்தல் களத்தில் தெரிவித்து வருவது உச்சகட்ட மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறது.