ஓராண்டு நீட்டிப்பு...இலவச உணவு தானிய திட்டம்...நாளை முதல் அமல்!

ஓராண்டு நீட்டிப்பு...இலவச உணவு தானிய திட்டம்...நாளை முதல் அமல்!
Published on
Updated on
1 min read

மத்திய அரசு அமல்படுத்திய இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்:

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவையே புரட்டி போட்டது. தொற்று பாதிப்பு ஒரு பக்கம் என்றால், அதனால் போடப்பட்ட ஊரடங்கால் மக்கள் அனைவரும் பெரும் நிதி சுமைக்கு ஆளானது மறுபக்கம். அந்த சூழ்நிலையில், கடந்த 2020 ஏப்ரல் மாதம் “கரீப் கல்யாண் அன்ன யோஜனா” என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. 

3 மாதம் நீட்டிப்பு:

இந்த திட்டத்தின்படி, ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இத்திட்டத்தை 2022 டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

ஓராண்டு காலம் நீட்டிப்பு:

ஏற்கனவே இத்திட்டத்தை, 3 மாத காலம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்தாண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாளை முதல் புதிய நீடிப்பு அமலுக்கு வருகிறது.

2 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவிடும்:

இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக அதிகாரிகள், 'தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, அரிசி, கோதுமை தானியங்கள் தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், ஜனவரி 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்றும், இந்த இலவச உணவு தானிய திட்டத்தை முறையாக செயல்படுத்த 18 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இத்திட்டத்தின் மூலம் சுமார் 81.35 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும், இதற்காக மத்திய அரசு 2 லட்சம் கோடி செலவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com