இனி இந்தியாவிலும் மெட்ரோவில் தண்ணீருக்கடியில் பயணிக்கலாம்!!!

இனி இந்தியாவிலும் மெட்ரோவில் தண்ணீருக்கடியில் பயணிக்கலாம்!!!

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க மெட்ரோ  திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது கொல்கத்தா.  இந்தியாவிலேயே முதல் முறையாக, கங்கை நதியின் கீழ் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 

இந்தியாவில் முதல்முறையாக..:

நாட்டிலேயே தண்ணீரின் கீழ் பயணிக்கும் முதல் மெட்ரோ திட்டம் இதுவாகும். இதன் மூலம், ஹவுரா நகரம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான மெட்ரோ ரயில் நிலையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புகள்:

ஹவுரா நிலையத்திற்கு சற்று கீழே கட்டப்படும் இந்த மெட்ரோ நிலையம் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது எனவும் இந்த மெட்ரோ நிலையம் தரையில் இருந்து 33 மீட்டர் ஆழத்தில் இருக்கும் எனவும்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஆசியாவிலேயே..:

தற்போது ஆசியாவின் மிக ஆழமான மெட்ரோ நிலையம் ஹாங்காங்கில் உள்ளது, அதன் ஆழம் சுமார் 60 மீட்டர் ஆகும். தற்போது ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் இரண்டாவது ஆழமான மெட்ரோ ரயில் நிலையமாக ஹவுரா நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

எப்போது நிறைவடையும்:

கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக அதிகாரி ஏ.கே.நந்தி கூறுகையில்,” கிழக்கு மேற்கு மெட்ரோ திட்டப் பணிகள் ஜனவரி 2023க்குள் நிறைவடையும். ஹூக்ளி ஆற்றின் கீழ் மெட்ரோ சுரங்கப்பாதையும் தயார் நிலையில் உள்ளது.” என கூறியுள்ளார்.

மேலும் “ஹவுரா மைதான மெட்ரோ ரயில் நிலையத்தின் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. மெட்ரோ நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள், சாதாரண பயணிகளுக்காக ஹவுரா மைதானம் வரை மெட்ரோ சேவைகள் தொடங்கப்படும்.” என தெரிவித்துள்ளார். 

 சிறப்பம்சங்கள்:

  • அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ.

  • ஆற்றின் அடியில் செல்லும் நேரம் 60 வினாடிகளுக்கு குறைவாகவே இருக்கும்.

  • ஹவுரா மைதானத்தில் இருந்து எஸ்பிளனேடுக்கு செல்ல ஆறு நிமிடங்கள் ஆகும்

  • மொத்தம் 16.55 கிமீ தொலைவு 10.8 கிமீ பூமிக்கு அடியில் உள்ளது. ஆற்றின் கீழ் பகுதியும் இதில் அடங்கும்.

  • இந்த முழு மெட்ரோ பாதையும் 2023 ஆம் ஆண்டு பயணிக்க தயாராகிவிடும்.

  • 2035-ம் ஆண்டுக்குள் இந்த மெட்ரோ பாதையில் 10 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள்.

இதையும் படிக்க: பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் உத்திரபிரதேசம்!!!