ஒருத்தன் கூட எழுதல...! - மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த்...

இசையமைப்பாளர் தேவாவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
ஒருத்தன் கூட எழுதல...! - மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த்...
Published on
Updated on
2 min read

400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பல்வேறு மொழிகளில் இசையமைத்த தேவா, தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ரஜினி - தேவா கூட்டணியில் உருவான அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் படங்களுக்கு இன்றளவும் ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது 72வது பிறந்தநாளையொட்டி, தேவா தி தேவா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏராளமான ரசிகர்கள், தேவாவின் இசை மழையில் நனைந்து உற்சாகமடைந்தனர். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் இந்நிகழ்வில் பங்கேற்று தனது அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தார். 

இந்நிகழ்ச்சியில் பாடிய பாடகி அனுராதா ஸ்ரீராம், கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடலை பாடினார். அப்போது ரஜினிகாந்தும் கருப்பு தான் என்ற வரியை அவர் பாடிய போது கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேனிசை தென்றல் தேவா குறித்து மேடையேறி பேசிய சூப்பர் ஸ்டார், தனது ஒரு சில ஆதகங்களை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய அவர்,

“தேவாவின் பாடல்களுக்கு தேவையான் ஆங்கீகாரம் கிடைத்ததா என எனக்கு தெரியவில்லை. இதற்கு முன் இது போன்ற நிகழ்வு நடந்ததா என எனக்கு தெரியவில்லை. மலேசிய முன்னாள் அதிபரான நாதன், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். அவர் தனது ஈம சடங்கில், ஒரு அழகான தமிழ் பாடலை போட்டு தன்னை வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அது என்ன பாடல் என்றால், தேவாவின் இசையில், வைரமுத்து வரிகளில், தேவாவே பாடிய “தஞ்சாவூர் மண்ணு எடுத்து” உருவான பாடல் தான். ஒரு பெண்ணை ஒவ்வொரு ஊரில் சிறப்பானவற்றையும் சேர்த்து ஒரு அழகான பொம்மை போல வடிவமைக்கப்பட்டவள் - அந்த பெண்! என அழகாக இருக்கும் பாடலை, தனது இறுதி ஊர்வலத்தில் ஒலிக்கப்படவேண்டும் என கூறி விட்டு இறந்தாராம்.

அதே போல, மலேசியாவில், ஒரு முன்னாள் அதிபர் இறந்ததை, உலகளவில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் இதனை மொழி பெயர்ப்பு செய்தும், அந்த பாடலை குறித்து செய்திகளை வெளியிட்டனர். ஆனால், இங்கு (தமிழ்நாட்டில்) யாருமே இதைப் பற்றி எழுதவில்லை. அவருக்கு (தேவா) எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும். அதனால், அனைத்து திறமைகளையும் கவனித்து அங்கீகரிக்க வேண்டும்”

என கூறினார். இந்த பேச்சு, சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும், எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், சக திறமையாளர்களை அங்கீகரிக்கும்  ஒரு கலைஞராக இருப்பதால் தான் அவருக்கு இன்று வரை இத்தனை விசுவாசமான ரசிகர்களாக இருக்கின்றனர் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து இனையத்தில் #RajiniKanth என்ற டாக் ட்ரெண்டாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com