மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை.....

மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை.....
Published on
Updated on
1 min read

மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது கிடையாது என்று இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலுக்கு பிறகு இலங்கையின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது.  இதன் காரணமாக ஏற்பட்ட போராட்டங்களால் தொடர் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.  தற்போது முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அவர் கனடா செல்ல அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த சூழலில், மின்கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரம் சட்டவிரோதமானது என்றும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும், ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க போவதில்லை எனவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com