
கூட்டாட்சி ஆட்சி முறையை தான் எதிா்ப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தான் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 13-வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அதிகாரங்களை பகிர தயாராக உள்ளதாகவும் தொிவித்த அவா், கூட்டாட்சி ஆட்சி முறையை எதிா்ப்பதாகவும் கூறினாா்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தல்......பிரகாசமான வெற்றி......