"எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் சிறுத்தைகளின் களத்தை வெல்ல முடியாது" திருமா அறைகூவல்!

"எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் சிறுத்தைகளின் களத்தை வெல்ல முடியாது" திருமா அறைகூவல்!
Published on
Updated on
2 min read

மிகவும் கூர்மையான சாதி ஒழிப்பு தான்  சிறுத்தைகளின் அரசியல் களம் என உறுதிபட தெரிவித்த திருமாவளவன்,  எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் சிறுத்தைகளின் களத்தை வெல்ல முடியாது எனவும் சவால் விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் விசிக தலைவர் திருமாவளவனின் 60 வயது நிறைவு மணிவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 640 பக்கங்களைக் கொண்ட மணிவிழா மலரை வெளியிட, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அதனை பெற்றுக் கொண்டார். 

பாடகர் கோவன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, கவிஞர் கபிலன் தலைமையில் கருத்தியல் கவியரங்கம் என மணிவிழா களைகட்டியது. இதன் இறுதியில்,  தான் எழுதிய கவிதையை திருமாவளவன் வாசிக்க அனைவரும் அதனை வெகுவாக வரவேற்றனர்.  ஜாகிர் உசேன் நடனக் குழுவின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர், விசிக தலைவர் திருமாவளவனின் அரசியல் பாதை குறித்த வரலாற்று சுவடுகளை விளக்கும் காணொலி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சத்யராஜ்,  கவிஞர் அறிவுமதி, கவிஞர் பழனிபாரதி, எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன் மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் மணி விழாவிற்கான வாழ்த்துரை வழங்கினர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், சனாதனத்தை வேரறுக்க திருமாவளவன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்றார். டிஜிட்டல் இந்தியாவை விட அனைவரும் ஒன்று சேர்ந்த திருந்திய இந்தியா தான் வேண்டும் என்றும் சத்யராஜ் அப்போது கூறினார்.

பின்னர் பேசிய திருமாவளவன், மிகவும் கூர்மையான சாதி ஒழிப்பு தான்  சிறுத்தைகளின் அரசியல் களம் என உறுதிபட தெரிவித்தார். மேலும், எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் சிறுத்தைகளின் களத்தை வெல்ல முடியாது எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com