மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் மனோஜ் ஜாவிடம் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
மன்னிப்பு கோரிய கோயல்:
அதற்கு பதிலளிக்கும் வகையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், மாநிலங்களவைத் தலைவருமான கோயல், யாரையாவது புண்படுத்தியிருந்தால், அறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளார்.
மேலும் கோயல், “நான் கூறிய கருத்தில் பீகாரையோ அல்லது பீகார் மக்களையோ அவமதிக்கும் நோக்கம் முற்றிலும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மேலும் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அந்த அறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுகிறேன். இது யாரையும் தீங்கிழைக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை,'' என்றும் கூறியுள்ளார்.
நடந்தது என்ன?:
இதற்கு முன்னதாக கூடுதல் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரும் ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தின் போது ஜா பேசும்போது கோயல் இந்தக் கருத்தை கூறியிருந்தார்.
ஏழைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசாங்கம் சமமான கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய கோயல் ”அவர்கள் வழி இருந்திருந்தால், அவர்கள் நாட்டை பீகாராக மாற்றுவார்கள் " என்று கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஜா ”பீகாரை அவமதிப்பது முழு நாட்டிற்கும் அவமானம்” என்று கூறியிருந்தார். மேலும் கோயல் அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: முடக்கப்பட்ட ஆ. ராசாவின் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள்?!!!