உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரில் ரஷ்ய படைகள் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை என அதிபர் புதின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் 10 மாதங்களை கடந்துள்ளது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயின. போர் தொடுத்த ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் மாண்டு போயினர்.
ஆனாலும் தாக்குதல் நடத்துவதில் சிறிதும் பின்வாங்காத ரஷியா, தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாடும், தன்பங்குக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ரஷ்யா அதிபர் புதின் பேசுகையில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை எனக் கூறியுள்ளார். உக்ரைனை மண்டியிட செய்வதே ஒரே நோக்கம் எனவும் ரஷ்ய படைகள் வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் புதின்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: தொடரும் பணிநீக்கங்கள்..... வீழ்ச்சியடைகிறதா மைக்ரோசாப்ட்?!!