மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இதனிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் கலைந்து சென்றதாக குற்றம் சாற்றியுள்ளார்.
மேலும், அவர்களின் நடத்தை வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்த அவர், இது எதிர்கட்சிகளுக்கு ஒரு அரசியல் பிரச்சினை என தெரிவித்த அவர், மணிப்பூர் மக்களை சந்தித்த எதிர்கட்சிகள், அதுகுறித்து விவாதம் நடத்த மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.