விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு பாடசாலை திட்டம் தொடக்கம்...!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  இரவு பாடசாலை திட்டம் தொடக்கம்...!

ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலையை நடிகர் விஜய் தொடக்கி வைக்கிறார்.

கடந்த மாதம் நீலாங்கரையில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 234 தொகுதிகளில் முதல் மூன்று இடம் பிடித்த 12 ஆம், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அழைத்து அவர்களை பாராட்டி கல்வி ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கினார்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க இருக்கிறார். இந்த திட்டத்திற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை அவர் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்னிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  இலவச இரவு பாட சாலை திட்டத்திற்கான இடம்  ஏற்பாடு செய்து தரப்படும் எனவும், அதற்கான வாடகை மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்பு முடிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.  தொகுதியில் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருகிறது.

ஏற்கனவே இரத்த தானம்,  விழியகம் எனப்படும் கண் தான திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கும் திட்டம்  உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும்  படிக்க    | மாவீரன் படத்தில் கட்சிக்கொடி; தடைக்கோரிய IJK... தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!