பிரதமா் நெதன்யாகு நிதித்துறையில் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கான சட்டத்தை எதிா்த்து பொதுமக்கள் தொடர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேலின் பிரதமாரக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறாா். இவா் மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
இந்நிலையில் நெதன்யாகு தலைமையில் நிதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிதாக சட்டம் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இப்புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் அரசுக்கும், நிதித்துறைக்கும் சம அதிகாரம் என்ற நிலை உருவாகும் என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது. இதன் காரணமாக நிதித்துறையின் மாற்றங்கள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹலெண்ட் இந்த அவசர சட்டத்தை விமர்சித்ததால் பிரதமா் நெதன்யாகு அமைச்சா் ஹலெண்ட்டை பதவியில் இருந்து விலக்கியுள்ளாா்.
பிரதமா் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டுகளில் இருந்து அவரைக் காப்பாற்றி கொள்வதற்காக இச்சட்டம் கொண்டு வருவதாக தகவல்கள் தொிவிக்கின்றன. இதனால் பிரதமர் கொண்டு வரும் புதிய சட்டத்தை எதிா்த்து அந்நாட்டு பொதுமக்கள் கடந்த சில நாட்களாகவே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனா். ஒருபக்கம் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையி்ல் இன்னொருபுறம் அந்நாட்டு விமான நிலைய ஊழியார்கள் விமான சேவையை முடக்கியுள்ளனா்.
இந்த போராட்டத்தில் பொது மக்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தைக் கட்டுபடுத்த போலீசாா் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மக்களை அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
-முருகானந்தம்