தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகம் சார்பில் திறந்தவெளி கல்வி முறையில் நகர்புற வாசிகளுக்கான 4 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 4 பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புது அறிமுகம்:
நகர்புற வாசிகளை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கூடுதலாக 4 சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நிரப்பபடாத இடங்கள்:
ஒரு சில இரண்டாம் தர தனியார் வேளாண் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் உடனடி சேர்க்கை மூலம் தற்பொழுது நிரப்பி வருவதாகவும் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு:
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக துணை வேந்தர் கீதா லட்சுமி,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் 2005 ஆம் ஆண்டு தொலை தூர கல்வி இயக்கம் உருவாக்கப்பட்டது.
இதில் நேரடி வகுப்பு முறையில் 44 வகையான சான்றிதழ் பாடங்கள் , 6 இணையவழி சான்றிதழ் பாடங்கள் ,வேளாண் இடு பொருள் தொடர்பான பட்டய படிப்பு (உர கடைகள் வைப்பதற்கு கட்டாயம் பட்டய படிப்பு சான்றிதழ் தேவை) மேலும் சில பட்டய படிப்புகள் (டிப்ளோமா course) நடத்தப்படுகிறது.
மீண்டும் தொடக்கம்:
தற்போது இந்த ஆண்டு நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு 4 வகையான சான்றிதழ் பாடங்கள் அறிமுக படுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டன. இடையில் சேர்க்கை எண் குறைவு காரணமாக அது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளோம்.
ஏற்கனவே காளான் வளர்ப்பு ,மூலிகை பயிர்கள் ,தோட்டகலைபயிற்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பம் உள்ளிட்ட 44 வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
சான்றிதழ் படிப்புகளில் சேர 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்(தேர்ச்சி அல்லது தோல்வி). 6 மாதங்கள் நடைபெறும் வகுப்புக்கு 3000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யபடுகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பாடங்கள்:
சான்றிதழ் பாடங்கள்:-
1. அலங்கார தோட்டம் அமைத்தல் (landscape and ornamental gardenening)
2.நாற்றாங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள் (Nursery technology)
3.மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் (Roof and Kitchen Gardern)
4. திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management)
பட்டய படிப்புகள்:-
1. பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை செடிகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்
2. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி
3. செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில்நுட்பங்கள்
4. வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள்
தகுதிகள்:
சான்றிதழ் படிப்பு களுக்கான தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, ஆறு மாதங்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு 3000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழில் பாடங்கள் நடைபெறும்.
அதே போல பட்டய படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .தமிழில் மட்டும் பாடங்கள் நடைபெறும் ஒரு வருட காலம் இரண்டு பருவங்களாக நடத்தப்படும் வகுப்புகளுக்கு 20 ஆயிரம் கட்டணம்.
பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பேனா நினைவு சின்னம் எதிர்ப்பும்... பாலியல் தொந்தரவும்....