"ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை" என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதன வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணைப் பிரச்சாரக் களமாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் பதவி என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம் என குறிப்பிட்டுள்ள அவர், திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அடித்தளமே திராவிட இயக்கம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, எல்லோருக்கும் எல்லாமும் என்பதுவே முதலமைச்சரின் இலக்காக இருக்கும்போது, பிரிவினை எங்கே உள்ளது என வினவியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தங்களுக்கு பிரச்சார கருவிதான், அவரை மாற்றக் கூடாது என முதலமைச்சரே கூறியுள்ளதாகவும் மேற்கோள்காட்டிய அவர், திராவிட இயக்க கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில், பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்ன தொண்டாற்றும் ஆளுநருக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:புதுமுக இயக்குநரின் அரசியல் கதையில் செல்வராகவன்!!