நியூசிலாந்தை தொடர்ந்து துயரத்துக்குள்ளாக்கும் இயற்கை பேரிடர்கள்!!

நியூசிலாந்தை தொடர்ந்து துயரத்துக்குள்ளாக்கும் இயற்கை பேரிடர்கள்!!

சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.  அதைப்போலவே சுனாமி எச்சரிக்கையும் நியூசிலாந்தில் விடப்படவில்லை.

நியூசிலாந்த் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 
நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 30 வினாடிகள் நீடித்ததால் கட்டிடங்கள் குலுங்கின.  இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி ஒன்றாக பதிவாகி உள்ளது. 

கடந்த வாரம் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நியூசிலாந்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.  அதைப்போலவே சுனாமி எச்சரிக்கையும் அங்கு விடப்படவில்லை.

"இது ஏற்கனவே மக்களுக்கு மிகவும் அழுத்தமான நேரம்.  உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று நியூசிலாந்து சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாக நியூசிலாந்தில் புயல், மழை போன்ற அழிவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”நேற்று வரை தலைவர்... இன்று முதல் எனது தம்பி....” சி.பி. ராதாகிருஷ்ணன்!!!