என்.எல்.சி-யை இழுத்து மூட வேண்டும் என பாமக கூறுவதை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்:-
நாடாளுமன்ற முடக்கம்,மணிப்பூர் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் ஏராளமான பணிகள் உள்துறை அமைச்சருக்கு உள்ளது,அதனைவிடுத்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தை துவக்கி வைக்கின்றார். இதனால் பாஜகவினர் நாட்டை விட கட்சியை பலப்படுத்தவே நினைக்கின்றனர் எனவும் இது விநோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது என்றார்.
மேலும் நேற்று நிகழ்ந்த பாமக முற்றுகை போராட்டத்தில் வன்முறை போராட்டம் வருத்தத்திற்குரியது என்றும் என்எல்சி நிறுவனம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,அதனை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்காக போராடக்கூடியவர்கள் தான் என தெரிவித்த அவர், என்எல்சி இழுத்து மூடப்பட வேண்டும்,அப்புறப்படுத்த வேண்டும் என பாமக கூறுவது ஏற்க முடியாது.
என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.