நிரந்திரமாக பறக்கும் நீலக்குருவி... X ஆக மாறும் ட்விட்டர் நிறுவனம்!!

நிரந்திரமாக பறக்கும் நீலக்குருவி... X ஆக மாறும் ட்விட்டர் நிறுவனம்!!
Published on
Updated on
1 min read

எலான் மஸ்க் தனது ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை "எக்ஸ்" என மாற்றப்போவதாக தெரிவித்துள்ளார்.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலன்மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது, கட்டாயம் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், ட்விட்டர் இலச்சினையை (Logo) குருவியிலிருந்து நாய் குட்டியாக மாற்றியது, மீண்டும் நாயை அகற்றி பழைய இலச்சினையான குருவியை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு மட்டும் இது அதிகாரப்பூர்வ, உறுதிசெய்யப்பட்ட கணக்கு என்பதை குறிக்கும் வகையில் ப்ளூ டிக் குறியீடு பயன்பட்டு வந்தது. ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு, கட்டண முறையில் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார்.

இப்படியாக அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்களை கொடுத்து பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்த எலான் மஸ்க், தற்போதும் ஒரு புதிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அதாவது மீண்டும், ட்விட்டரின் லோகோவை நிரந்திரமாக மாற்றப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது, சிறந்த லோகோ கிடைக்கும் பட்சத்தில், இரவோடு இரவாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரின் சிஇஓ-வாக, லிண்டா யாக்காரினோவை நியமித்திருந்தார். அப்பொழுது, ட்விட்டரை "எக்ஸ்" நிறுவனமாக மற்றும் திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது, ட்விட்டரை சமூக வலைத்தளம், மெசேஜிங், பண பரிவர்த்தனை போன்ற அனைத்து செயல்பாடுகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையிலான செயலியாக மாற்றப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை "எக்ஸ்" மாற்றப்போவதாக தெரிவித்துள்ளார். அதன் படி தற்போது X.com உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், த்விட்டேர் லோகோ விரைவில், நீல குருவியில் இருந்து X ஆக மாற்றப்படும் எனவும், படிப்படியாக மேல்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com