அம்மா பிறந்தநாள்.... அதிமுக இரு அணிகள்... தனித்தனி கொண்டாட்டம்!!!

அம்மா பிறந்தநாள்.... அதிமுக இரு அணிகள்... தனித்தனி கொண்டாட்டம்!!!
Published on
Updated on
1 min read

சென்னையில் முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரும் வெவ்வேறு இடங்களில் விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

ஈபிஎஸ் அணி:

மறைந்த முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.  பொதுக்குழு வழக்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சாதகமாக முடிந்துள்ள நிலையில், அவர் தரப்பினர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்துள்ளனா்.

இதற்காக வாசலில் போஸ்டர்கள், கொடிகள், வாழை மரங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.  மேலும், அதிமுக அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஓபிஎஸ் அணி:

இதேபோல், ஓ.பன்னீா் செல்வம் தரப்பினா் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில், விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், பொதுக்குழு விவகாரத்தில்  உச்சநீதிமன்ற தீா்ப்புக்குத் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com