தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோச்சா புயலாக இன்று காலை 5.30 மணியளவில் வலுவடைந்தது.
போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 510 கி.மீ., காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1210 கி.மீ மற்றும் சிட்வே (மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 1120 கி.மீ. நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து இன்று நள்ளிரவில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, அது படிப்படியாக மீண்டு, நாளை காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடலில் மே 12 மாலையில் அதிதி தீவிர புயலாக புயலாக மேலும் வலுவடையும். இது 13 ஆம் தேதி மாலையில் அதன் உச்சக்கட்டத்தை எட்டும். அதன்பிறகு, மே 14 காலை முதல் சிறிது வலுவிழந்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) இடையே மே 14 ஆம் தேதி முன்பகல் நேரத்தில் அதிகபட்சமாக 120-130 கிமீ இடையே 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: வாட்ஸ்அப்பில் 98 ஆயிரம் இழந்த பெண்...நடந்தது என்ன!!