மோர்பி தொங்கும் பால விபத்து...திட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடி..!!

மோர்பி தொங்கும் பால விபத்து...திட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடி..!!
Published on
Updated on
1 min read

குஜராத்தின் மோர்பி சோகத்தை கருத்தில் கொண்டு இன்று எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இல்லை என்ற செய்தியை குஜராத் மாநில பாஜக செய்தி தொடர்பாளர்  டாக்டர் யக்னேஷ் தவே தெரிவித்துள்ளார்.

பயணங்களை ரத்து செய்த பிரதமர்:

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.  இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை, குஜராத்தின் மோர்பியில் மச்சு ஆற்றின் மீது கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் இறந்தனர்.  

இதைத் தொடர்ந்து, மோர்பி பாலம் விபத்தை கருத்தில் கொண்டு திங்கள்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவிருந்த சாலை திறப்புநிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார் பிரதமர் மோடி. 

செய்தி தொடர்பாளர் தகவல்:

செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் டாக்டர் யக்னேஷ் டேவ், மோர்பி சோகத்தை கருத்தில் கொண்டு திங்கள்கிழமை எந்த விழாவும் இல்லை என்ற செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.  

மேலும் மோர்பி விபத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக கூறப்படுவதாகவும் தெரிவித்த அவர் இருப்பினும், 2900 கோடி செலவிலான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் திட்டம் மட்டும் நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com