”தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு நடத்த வேண்டும்" அமைச்சர் உத்தரவு!

Published on
Updated on
1 min read

நாமக்கல் அருகே ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த உணவுத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கலையரசி என்ற சிறுமி அண்மையில் உயிரிழந்தார். அதே உணவகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 13 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 

அதில், உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெறிமுறைகள் பின்பற்றாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com