ரூ. 1.20 கோடி செலவில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்...திறந்து வைத்த அமைச்சர்!

ரூ. 1.20 கோடி செலவில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்...திறந்து வைத்த அமைச்சர்!

சென்னை - அண்ணா சதுக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டுகள் கொண்டாடுவதற்கு திமுக முடிவெடுத்து கொண்டாடியும் வருகிறது. அதன் ஒருபகுதியாக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் சென்னை - அண்ணா சதுக்கம் பகுதியில் 1 கோடியே 20 லட்சம் எஊபாய் மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மாநில திட்டக்குழு கூட்டம் ஆரம்பம்...முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

இந்நிலையில், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
ரூ. 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்காக சிறப்பாக ஒரு அறை அமைக்கப்பட உள்ளதாகவும், ரூ.36 லட்சம் செலவில் நவீன கழிப்பறை கட்ட இருப்பதாகவும்,  ரூ. 10 லட்சம் செலவில் குளிரூட்டப்பட்ட அறையும் கட்ட இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், அண்ணாசதுக்கம் என்ற பெயர் இருக்கும் போது கலைஞர் பெயரை வைத்து இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அண்ணா சதுக்கம் தான், ஆனால் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பதிலளித்தார்.