”எங்கள் கை என்ன பூப்பறிக்குமா.....” சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு ஆவேச பதில்!!!

”எங்கள் கை என்ன பூப்பறிக்குமா.....” சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு ஆவேச பதில்!!!

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார்.

சீரமைப்பு பணிகள்:

ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள் நந்தவனம் சீரமைத்தல் முதலான பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்து பேசினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள்:

இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

புனரமைப்பு செலவு:

இந்த கோயில் திருக்குளத்தை சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

நம்பிக்கை:

திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செய்யப்படும் என நம்பிக்கை வந்துள்ளது.

நன்கொடை:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில்களுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை வந்துள்ளது.

அன்னதானம்:

தைப்பூசத்தை முன்னிட்டு சில கோவில்களில் திருத்தேர் பவனிக்கு வரும் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

குடமுழுக்கு:

திமுக ஆட்சி ஏற்ற பிறகு நான் 44 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.  பிப்ரவரி 26 ம் தேதிக்குள் 34 கோயில்களுக்கு குடமுழக்கு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

பூப்பறிக்குமா?:

கலைஞரின் நினைவாக மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் உடைப்பேன் என சீமான் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் ஆவேசப்பட்டதற்கு, எங்கள் கைகள் அதுவரை பூப்பறிக்குமா என அமைச்சர் சேகர் பாபு பதில் கூறினார்.

தகுதியானவர்கள் மட்டுமே:

எந்த கோயில்களில் பணியாளர் பற்றாக்குறை இருக்கிறது அங்கு முறையாக  தகுதியான பணியாளர்களை அமர்த்துவதற்கான வேலை நடைபெற்று வருகிறது 

அனைவரும் அர்ச்சகர்:

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் இதுவரை  38 பேருக்கு இதுவரை பணி ஆனை வழங்கப்பட்டு உள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கழிவறை இல்லா பெண் காவலர்கள்.....பிரச்சினைக்கு தீர்வு எப்போது?!!!