தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை பார்த்து மத்திய அரசு பயந்து நடுங்குகிறது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நேற்று அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். முன்னதாக அப்பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் மெய்நாதனுக்கு ஆரத்தி எடுத்து பெற்றோர்கள் வரவேற்றனர். பின்னர் பள்ளி வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கேட்டறிந்தார்.மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நடவு செய்த அமைச்சர் மெய்யநாதன் அதனை தொடர்ந்து பராமரித்து வளர்க்குமாறும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
இதன்பின் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், மிக மிக முக்கியமான சூழலில் திராவிட மாடல் ஆட்சியியை தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் பல நலத்திட்டங்களை பார்த்தும், முதல்வரின் செயல்பாடை பார்த்தும் மத்திய அரசே பயந்து நடுங்குகிறது என்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
மேலும் அவர் பேசுவையில்: தமிழக முதல்வர் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அண்ணா பிறந்த நாளில் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் அத்திட்டத்தின் அனைத்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் மாத மாதம் கிடைக்கப் போகிறது என்றும் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை பூர்த்தி செய்து குடும்பத் தலைவிகள் பயன்பட வேண்டும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
இதையும் படிக்க:எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்; 16-ம் தேதி வெளியீடு!