காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சாடிய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஓரணியில் இருக்கும் இரு கட்சிகளும் பேசி பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாமே என தெரிவித்திருந்தார்.
இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் திருத்தங்களோடு தீர்ப்பு அறிவித்தபின், இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைக்கு தீர்வுகாண முடிந்திருந்தால், நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை எனவும் தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு என சொல்வது போல், தோழமையாக இருந்தாலும், உரிமையை நிலைநாட்டுவதில் தனித்தன்மை கடைபிடிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மத்திய இணையமைச்சரின் கருத்தை வழிமொழிந்தது போல் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்ம் அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதையும் படிக்க || ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால், "பாரதியார் மண்டபம்" ஆக பெயர் மாற்றம்!!