பிரதமரை சந்தித்த மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர்...! என்ன காரணம்...?

பிரதமரை சந்தித்த  மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர்...! என்ன காரணம்...?
Published on
Updated on
1 min read

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் சத்யா நாதெல்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெல்லா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்று பயணத்தின் முதல் நாளான செவ்வாயான்று மும்பையில் நடந்த மைக்ரோசாப்ட் ஃபியூச்சர் ரெடி லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, டிஜிட்டல் காலத்தில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி விவாதித்துள்ளார். 

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து டிஜிட்டல் மாற்றத்தில் நிலையான மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துவது ஊக்கமளிப்பதாக பேசியுள்ளார். மேலும், இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், நுண்ணறிவு நிறைந்த சந்திப்புக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தும், டிஜிட்டல் மாற்றம் மூலம் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கம் ஆழ்ந்த கவனம் செலுத்துவது ஊக்கமளிக்கிறது. மேலும் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கத்தை உணர்ந்து இந்தியாவுக்கு உதவ தாங்கள் காத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.   

-- சுஜிதா ஜோதி 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com